கன்னடத்தில் உருவான இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ‘சாருலதா’ படத்திற்கு முன்பு இயக்குநர் பொன்குமரன் இயக்கிய முதல் படம் இது.சுதீப் ஹீரோவாக நடிக்க, ப்ரியாமணி, பாவனா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். சிறந்த இயக்குநருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுத் தந்த படம் இது.
சாதாரணமான ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மிகப்பெரிய தாதா ஒருவனிடம் மோதும் அதிரடி ஆக்ஷன் படம் இது. இந்தப் படம் வெளியான போது படத்தை பார்த்த விஜய் தமிழில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது அந்த அளவிற்கு கமர்ஷியல் படம் இது என்கிறார் பொன்குமரன்.இப்போது இந்தப் படம் ‘ஹலோ பாஸ்’ என்ற டைட்டிலுடன் தமிழில் வெளியாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி