இந்த வழக்கு தற்போது பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நாயின் எஜமானி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வழக்கு நடைபெறுகிறது. கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் சிலரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் யார் உண்மையான குற்றவாளி என்று அடையாளம் காட்டுவதற்காக அந்த நாயை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
நாயிடமிருந்து வெளிப்படும் எதிர்வினையை வைத்து யார் குற்றவாளி என்று அறிந்து கொள்ள, கைதிகள் ஒவ்வொருவரும் நாயை அடிப்பதுபோல் பாசாங்கு செய்ய வைக்கப்பட்டனர். அப்போது அவர்களில் ஒருவரைப் பார்த்து அந்த நாய் கோபமாகக் குரைத்ததாக கூறப்படுகிறது.பிரான்ஸில் சாட்சி சொல்லவும் குற்றவாளிகளை அடையாளம் காட்டவும் நாய்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது என்பது புதிதல்ல.
கடந்த 2008-ல் ஸ்கூபி எனும் பெயருடைய நாய்தான் குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக நீதிமன்றத்திற்குச் அழைத்து வரப்பட்ட முதல் மிருகமாகும். ஆனால் உள்ளூர் பொதுமக்களைப் பொறுத்த வரையில் இத்தகைய முயற்சிகள் தோல்வியடையும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி