தற்போது மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள கோச்சடையான் திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையிட உள்ளனர்.ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு பல ஆராவாரங்களும், எதிர்ப்பார்ப்புகளும் இருப்பது போல் தற்போது ரஜினியின் கோச்சடையானும் பேரார்வம் பெற்றிருக்கிறது.
மேலும் உழைப்பாளர் தினம் மற்றும் தல அஜித்தின் பிறந்தநாளுமான மே 1 ஆம் தேதியில் கோச்சடையான் சுமார் 3850 திரையரங்கில் வெளியிடவுள்ளது.
ஜாக்கிசான் படம் வெளிவரும் எண்ணிக்கையை விட மிக அதிகமான எண்ணிக்கை என கூறப்படுகிறது.தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 9 மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படம் மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் வெளிவரும் முதல் அனிமேஷன் 3டி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி