ஆனால் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து 2009–ம் ஆண்டு கெம்ப்பிடம் இருந்து லீ விவாகரத்து பெற்றார். இதன் பின்னர் சிறிது காலம் கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய பிரெட்லீ, லானா ஆண்டர்சன் என்ற பெண்ணின் காதல் வலையில் விழுந்தார்.இவர்கள் நெருங்கி பழகுவது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. இருவரும் ஒன்றாக கைகோர்த்து ஒரு விழாவில் முத்தமிட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரெட்லீ தனது காதலி 29 வயதான லானா ஆண்டர்சனை திருமணம் செய்து கொண்டது இப்போது தெரியவந்துள்ளது.சிட்னியின் சீபோர்த்தில் உள்ள அவரது புதிய வீட்டில் தனிப்பட்ட முறையில் நடந்த நிகழ்ச்சியில் நெருங்கியவர்களின் முன்னிலையில் பிரெட்லீ, லானாவை கரம் பிடித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி