ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே சூர்யா, ஆறு, வேல்,சிங்கம், சிங்கம்2 ஆகிய நான்கு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி இணைய உள்ளது.ஹரி தற்போது விஷால் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் பூஜை திரைப்படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார். இதுகுறித்து ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்த மும்பை சென்றபோது அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சூர்யாவை சந்தித்து பேசி, அடுத்த படத்தில் இணைய இருப்பதை உறுதி செய்துள்ளார்.
சூர்யா மற்றும் ஹரி மீண்டும் இணையும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இலியானாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கெளரவ வேடத்தில் பாலிவுட்டின் முக்கிய நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி