இதனால் ராணா படம் நின்று போனது. தீவிர சிகிச்சைக்கு பிறகு ரஜினி குணமடைந்தார். இதையடுத்து ராணா படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் ரஜினி நடிக்கவில்லை. அதற்கு பதில் கோச்சடையான் படத்தில் நடித்தார். தற்போது கோச்சடையான் படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகும் நிலையில் ‘ராணா’ படத்தை மீண்டும் எடுக்கப் போவதாக சவுந்தர்யா அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
சோச்சடையான் நல்ல கதை. எனவேதான் இதில் நடிப்பதற்கு எனது தந்தை ரஜினி ஒப்புக்கொண்டார். நவீன தொழில் நுட்பத்தில் இதை எடுத்துள்ளோம். ஹாலிவுட்டில் தான் இது போன்ற படங்கள் வருகின்றன. இது மாதிரி படங்கள் எடுப்பதற்கு ஆறு வருடங்கள் வரை ஆகும். அனால் இரண்டு வருடத்தில் முடித்துள்ளோம்.ராணா படத்தை துவங்கும் போது என் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படவேலைகள் முடங்கின. குணமடைந்த பிறகு அதில் நடிக்கும் அளவுக்கு ரஜினியின் உடல் நிலை ஒத்துக்காது என கருதி படப்பிடிப்பை கைவிட்டோம். ராணா கதை தயாராக இருக்கிறது. அந்த படத்தை ரஜினியை வைத்து மீண்டும் எடுக்க விரும்புகிறோம். நவீன தொழில் நுட்பத்தில் ரஜினி அதிக உடல் உழைப்பை கொடுக்காத வகையில் இந்த படத்தை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி