சென்னை:-எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது மான் கராத்தே படம்.
மான் கராத்தே படம் ரிலீசாவதற்கு முன்பே தமிழக உரிமை, சாட்டிலைட் உரிமை, மற்றும் வெளிநாட்டு உரிமை ஆகியவை சேர்த்து ரூ.30 கோடிக்கு வியாபாரம் ஆனது.
மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த மான் கராத்தே படம் வெளியான பிறகு படத்தைப் பற்றி ரசிகர்களிடையே இருவிதமான விமர்சனங்களை பெற்றன.இதுவரை கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பெரிய ஹீரோக்களின் படங்கள் மட்டுமே அதிக தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது.
அந்த வகையில் சிவகார்த்திகேயனின் இந்த ‘மான் கராத்தே’ படமும் சுமார் 675 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது.இந்த படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் மூன்றே நாட்களில் 12கோடி வசூலித்திருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி