புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சுல்தான்பூர் பகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர்.
அவருக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது ஒரு ஆசாமி அவருக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவன் சற்றும் எதிர்பாராத வகையில் ‘பளார்’ என்று கெஜ்ரிவால் கன்னத்தில் அடித்துவிட்டார். அந்த நபர் ஆட்டோ டிரைவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடிவாங்கிய கெஜ்ரிவால் டெல்லி ராஜ்காட்டில் மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி