சென்னை:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பால்சகூ என்பவர் நிறுவிய ஆசியன் அவார்ட்ஸ் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 63-வது இடம் பெற்றிருக்கிறார். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி 66-வது இடத்தை பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் சீன அதிபர் சீ ஜின்பிங் முதல் இடத்தை பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2-வது இடத்தையும், பாரதீய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி 4-வது இடமும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் 5-வது இடமும், பிரதமர் மன்மோகன் சிங் 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி