செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தில் அர்னால்டு!…

‘ஐ’ படத்தில் அர்னால்டு!…

‘ஐ’ படத்தில் அர்னால்டு!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்திகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டது

படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தை போலவே இசைவெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு,படத்தின் ஆடியோ விழாவுக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.ஆஸ்கார் ரவிச்ச்ந்திரன் தனது தசாவதாரம் படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது ஜாக்கிசானை வரவழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெர்மினேட்டர், ட்ரூ லைஸ் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் அர்னால்டு என்றாலும், இந்த படத்தின் கதை பாடி பில்டிங் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு பொருத்தமாக ஒரு பாடி பில்டர் நடிகரை வரவழைப்பது பொருத்தமாக இருக்கும் என்பவதற்காகவே அர்னால்டை அழைத்து வர இருப்பதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி