முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரகானே 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி இலங்கை பந்துவீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தது. ரோகித் சர்மா தனது பங்கிற்கு 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த யுவராஜ் சிங் நிதானமாக அடிக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 43 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரை சதம் கடந்தார்.அணியின் ஸ்கோர் 119 ஆக இருந்தபோது யுவராஜ் சிங் விக்கெட்டை இழந்தார். 21 பந்துகளை எதிர்கொண்ட அவர், 11 ரன்களே சேர்த்திருந்தார். கடைசி நேரத்தில் கேப்டன் டோனி(4 நாட் அவுட்), சிக்சர்களை பறக்க விடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.தொடக்க ஆட்டக்ககாரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் தங்களது கடைசி 20 ஓவர் போட்டியில் விளையாடிய ஜெயவர்தனாவும் சங்ககராவும் அதிரடியில் இறங்கினர்.24 ரன்களில் ஜெயவர்தனே ஆட்டமிழந்தார். வெற்றிக்கு இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இருப்பினும் அனுபவ வீரர் சங்ககரா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.
17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து இலங்கை அணி முதன் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.
IND – Inning
Batsman R B M 4s 6s S/R
Sharma R. c Senanayake S. b Herath R. 29 26 0 3 0 111.54
Rahane A. b Mathews A. 3 8 0 0 0 37.50
Kohli V. run out Malinga L. 77 58 2 5 4 132.76
Singh Y. c Perera T. b Kulasekara N. 11 21 2 0 0 52.38
Dhoni M. not out 4 7 0 0 0 57.14
Extras: (w 2, b 2, lb 2) 6
Total: (20 overs) 130 (6.5 runs per over)
Bowler O M R W E/R
Kulasekara N. 3.6 0 29 1 8.06
Mathews A. 3.6 0 25 1 6.94
Senanayake S.3.6 0 22 0 6.11
Malinga L. 3.6 0 27 0 7.50
Herath R. 3.6 0 23 1 6.39
SRI – Inning
Batsman R B M 4s 6s S/R
Perera K. c Jadeja R. b Sharma M. 5 7 0 1 0 71.43
Dilshan T. c Kohli V. b Sharma M. 18 16 0 4 0 112.50
Jayawardene M. c Ashwin R. b Raina S. 24 24 0 4 0 100.00
Sangakkara K. not out 52 35 1 6 1 148.57
Thirimanne L. c Dhoni M. b Mishra A. 7 11 0 1 0 63.64
Perera T. not out 23 14 1 0 3 164.29
Extras: (w 3, lb 2) 5
Total: (17.5 overs) 134 (7.5 runs per over)
Bowler O M R W E/R
Kumar B. 2.6 0 18 0 6.92
Sharma M.1.6 0 18 1 11.25
Mishra A. 3.6 0 32 1 8.89
Raina S. 3.6 0 24 1 6.67
Jadeja R. 0.6 0 11 0 18.33
Ashwin R.3.5 0 29 1 8.29
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி