செய்திகள்,திரையுலகம் பாலிவுட் நடிகை அலியாபட்டுடன் நடிக்க விரும்பும் தனுஷ்!…

பாலிவுட் நடிகை அலியாபட்டுடன் நடிக்க விரும்பும் தனுஷ்!…

பாலிவுட் நடிகை அலியாபட்டுடன் நடிக்க விரும்பும் தனுஷ்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டில் 1999 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ மற்றும் ‘ஹைவே’ திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் அலியாபட்.தற்போது இவரை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க கோலிவுட் வட்டாரங்கள் வலை வீசிய வண்ணம் உள்ளது.

கௌதம் மேனன் அஜித்தை வைத்து இயக்கும் படம், ஏ ஆர் முருகதாஸ், விஜய் கூட்டணியில் வர இருக்கும் ‘கத்தி’ மற்றும் ‘அஞ்சான்’ போன்ற படங்களில் அலியாபட்டை கேட்ட பிறகே மற்ற கதாநாயகிகளை தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.பாலிவுட்டில் 3 கோடி சம்பளம் வாங்கும் அலியா தமிழில் 5 கோடி வாங்குவார் என கூறப்படுகிறது.

மேலும் தனுஷிற்கு அலியாவுடன் நடிக்க ஆசையாம். அதனால் வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கும் படத்தில் எப்படியாவது அலியாவை நடிக்க வைக்க அவரிடம் கதை சொல்லிவந்தாராம். ஆனாலும் கதை கேட்ட அலியா இன்னும் தலையசைக்கவில்லையாம்.பாலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக துடிக்கும் அலியா கண்டிப்பாக இப்போதைக்கு கோலிவுட் பக்கம் செவி சாய்க்கமாட்டார் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி