செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு 20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்…

20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்…

20 ஓவர் உலக கோப்பையை வெல்வது யார்?… இந்தியா,இலங்கை நாளை மோதல்… post thumbnail image
டாக்கா:-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16–ந்தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கின. இதில் இருந்து வங்காளதேசம், நெதர்லாந்து அணிகள் ‘சூப்பர்10’ சுற்றுக்கு தகுதி பெற்றன.‘சூப்பர்10’ சுற்று ஆட்டங்கள் 21–ந்தேதியில் இருந்து ஏப்ரல் 1–ந்தேதியுடன் முடிந்தன. இதன் முடிவில் இந்தியா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் வெளியேற்றப்பட்டன.நேற்று முன்தினம் நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெஸ்ட்இண்டீசை 27 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நேற்று நடந்த 2–வது அரை இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது.20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது.
இதில் இந்தியா,இலங்கை அணிகள் மோதுகின்றன. 2007–ம் ஆண்டு சாம்பியனான இந்தியா 2–வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இலங்கை அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் சமநிலையில் இருப்பதால் மீண்டும் உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது. வீராட் கோலி, ரெய்னா, ரோகித்சர்மா, ரகானே ஆகியோர் பேட்டிங்கிலும், அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.இலங்கை அணியின் வேகப்பந்து வீரர் மலிங்கா இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். இது தவிர ஹெராத், செனனாயகே, பிரசன்னா போன்ற சிறந்த சுழற்பந்து வீரர்களும் உள்ளனர்.

பேட்டிங் வரிசை சிறப்பாக இருப்பதால் எந்த இலக்கையும் இந்திய வீரர்களால் எடுக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பேட்டிங் திறன் இறுதிப்போட்டியிலும் வெளிபட்டால் இந்தியாவின் உலக கோப்பையை வாய்ப்பை தடுக்க இயலாது.2011–ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை இலங்கை வீழ்த்தி தான் இந்தியா கைப்பற்றியது. இதேபோல 20 ஓவர் உலக கோப்பையையும் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியை போலவே இலங்கையிலும் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். தில்சான், குஷால் பெரைரா, முன்னாள் கேப்டன்கள் ஜெயவர்த்தனே, சங்ககரா போன்ற சிறந்த பேட்ஸ் மேன்கள் உள்ளனர்.உலக கோப்பை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும்.நாளைய இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி