செய்திகள்,திரையுலகம் மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் மே 13ம் தேதி வெளியீடு!…

மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் மே 13ம் தேதி வெளியீடு!…

மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் மே 13ம் தேதி வெளியீடு!… post thumbnail image
வாஷிங்டன்:-மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் எக்ஸ்கேப் ஆல்பம் வருகிற மே 13ல் வெளியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது விரைவில் ஐட்யூன்கள் வழியே ரசிகர்களுக்கு கிடைக்கும். இந்த ஆல்பத்தில் இதுவரை வெளியிடப்படாத ஜாக்சனின் பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.

மொத்தம் 8 பாடல்கள் அடங்கிய ஆல்பம் தொகுப்பு பணியை எபிக் ரெகார்ட்ஸ் மேற்கொண்டுள்ளது.அதன் தலைமை செயல் அதிகாரி ரீட் கூறுகையில், பாப் இசை உலகின் அரசனாக விளங்கும் மைக்கேல் ஜாக்சன் விட்டு சென்ற இசை தயாரிப்புகளில் சில அவர் நேரடியாக பணியாற்றிய அல்லது பணியாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்த இசை அமைப்பாளர்களின் மேற்பார்வையில் வெளியிடப்படுவதால் சிறப்பு பெறுகின்றன என்று கூறியுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு மைக்கேல் என்ற பெயரில் வெளியான பாடல் தொகுப்பிற்கு பின்னர் வெளியாகும் ஆல்பம் தொகுப்பு எக்ஸ்கேப் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி