சென்னை:-ஜீவா, துளசி நடித்த ‘யான்‘ படத்தை இயக்கிய ரவி. கே.சந்திரன் தனது அடுத்த படத்திற்காக ஹாரீஸ் ஜெயராஜை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த தகவலை டுவிட்டரில் ஹாரீஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் தான் கேமிராவுக்கு முன்னால் நிற்கபோவதாகவும், ரசிகர்கள் தனக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.ஹாரீஸ் ஜெயராஜ் படத்திற்கான போட்டோஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
ஹாரீஸ் ஜெயராஜுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.39 வயதாகும் ஹாரீஸ் ஜெயராஜ் கடந்த 2001ஆம் ஆண்டு கவுதம் மேனனின் “மின்னலே” படத்தின் மூலம் இசை அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி