செய்திகள்,திரையுலகம் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 3வது திருமணம்!…

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 3வது திருமணம்!…

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்  3வது திருமணம்!… post thumbnail image
லாஸ் ஏஞ்சல்ஸ்:-பிரபல ஹாலிவுட் படமான ‘பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்’ திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்றவர், நடிகர் ஜானி டெப் (வயது 50). இவர் கடந்த 1983–ம் ஆண்டு லோரி ஆன் ஆலிசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் 1998 முதல் பிரபல பிரெஞ்சு நடிகை வனஸா பரிடிஸ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு வெளிவந்த ‘தி ரம் டைரி’ என்ற திரைப்படத்தில் நடித்த போது, நடிகை ஆம்பர் ஹெர்ட்டுடன் (27) அவருக்கு காதல் மலர்ந்தது.

கடந்த 2012–ம் ஆண்டு நடிகை வனஸா பரிடிசை பிரிந்த ஜானி தெப்புக்கும், நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. இதை நேற்று உறுதி செய்த ஜானி தெப், தனது வருங்கால மனைவியான ஆம்பர் ஹெர்ட் அற்புதமான பெண் என்று வர்ணித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி