இந்த சம்பவம் பற்றி விசாகா சிங் கூறியதாவது: படப்பிடிப்பு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. ஒத்திகையின்போது சுழன்றபடி ஓடும் காட்சியில் நன்றாக நடித்தேன்.டேக் எடுப்பதற்காக இயக்குனர் ஆக்ஷன் சொன்னார். நான் சுழன்றபடி ஓட தயாரானபோது அருகில் இருந்த உதவி இயக்குனர் என்னை வேகமாக தள்ளிவிட்டார். இதில் நான் பேலன்ஸ் தவறி ரோட்டில் விழுந்தேன். வலி தாங்க முடியாமல் கதறினேன். அதிர்ச்சி அடைந்த பட குழுவினர் ஓடிவந்து என்னை மீட்டனர். வலியால் துடித்த என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அதுவரை எனக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது தெரியாது.
என்னை பரிசோதித்த டாக்டர் விலாவில் முறிவு ஏற்பட்டது பற்றி சொன்னபோது ஷாக் ஆனேன்.2 வாரத்துக்கு படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும். காயம் ஆற 4 வாரங்கள் ஆகும் என்று டாக்டர் கூறியபோது கண்கலங்கிவிட்டேன். நான் அந்த காட்சியில் வேகமாக ஓட வேண்டும் என்பதற்காகவே உதவி இயக்குனர் தள்ளிவிட்டார். அது இதுபோல் ஆகிவிட்டது. ஷூட்டிங் முடித்த கையோடு நான் லண்டன் போக இருந்தேன். இப்போது பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி