இதை கண்டித்து தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சார்பில் அதன் தலைவர் பாலகுருசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விருகம்பாக்கம், சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதற்காக அவர்கள் ஆற்காடு சாலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
அப்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த விருகம்பாக்கம் போலீசார், முற்றுகையிட முயன்றவர்களை சாலையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைதான அனைவரையும் பஸ்சில் ஏற்றி அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு வீட்டின் அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி