சென்னை:-விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன் படம் அடுத்த வாரம் ரிலீசாகிறது. இந்த படத்தில் உதட்டோடு உதடு சேர்த்து முத்த காட்சியில் நடித்துள்ளதால் தணிக்கை குழு ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.
முத்த காட்சியை நீக்கினால் யு சான்றிதழ் தருவதாக கூறியது. ஆனால் படக்குழுவினர் ஏற்கவில்லை.இதையடுத்து நான் சிகப்பு மனிதன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இன்று மறு தணிக்கை குழுவினர் படம் பார்க்கிறார்கள்.அவர்கள் படம் பார்த்தப் பிறகுதான் யு சான்றிதழ் கிடைக்குமா? அல்லது யு ஏ சான்றிதழ் கிடைக்குமா? என்பது தெரியவரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி