இஸ்லாமாபாத்:-வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு கோரி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. தேசதுரோக வழக்கில் முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை குண்டு வைத்து கொள்ள முயற்சி செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் முஷாரப் தமது பண்ணை இல்லத்திற்கு காரில் சென்ற போது வெடிகுண்டு வெடித்தது. ராணுவப்படை கார்டியாலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து முஷரப்பின் பண்ணை இல்லம் நோக்கி கார் சென்றபோது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். குண்டுவெடிப்பு குறித்தான சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி