சித்தார்த் இப்படத்தில் கார்த்திக் என்ற பெயரில் இயக்குனராக நடிக்கிறார். ஹோட்டல் நடத்தும் பெண்ணாக லட்சுமி மேனனும், பாபி சிம்ஹா சேது என்ற பெயரில் மதுரையில் ரவுடிக்கும்பல் தலைவனாகவும் நடிக்கின்றனர்.சித்தார்த் ரவுடிகளைப் பற்றி படம் இயக்குவதற்காக மதுரையில் தங்கி அங்குள்ள ரவுடிகளின் நடவடிக்கை களை கவனித்து வருகிறார். இந்த நிலையில் மதுரையில் பெரிய தாதாவான சிம்ஹாவுக்கு நிச்சயம் செய்த லட்சுமி மேனன் மீது காதலில் விழுகிறார்.
இதனால் சித்தார்த்துக்கும், சிம்ஹாவுக்கும் இடையில் சண்டை எழுகிறது. இதில் சித்தார்த்தை கொலை செய்ய முயல்கிறார் சிம்ஹா. அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் க்ளைமேக்ஸ்.பிட்சா என்ற திகில் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இரண்டாவதாக இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி