டோக்கியோ:-தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.46 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளிகளாக பதிவானது.
பயங்கர நிலநடுக்கத்தில் 5 பேர் பலியானார்கள். அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து ஜப்பான் நாட்டை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கின என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வடக்கு ஜப்பானில் பல்வேறு பகுதிகள் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி