செய்திகள்,திரையுலகம் சகாப்தம் படத்தில் மகனுடன் இணையும் விஜயகாந்த்!…

சகாப்தம் படத்தில் மகனுடன் இணையும் விஜயகாந்த்!…

சகாப்தம் படத்தில் மகனுடன் இணையும் விஜயகாந்த்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு தீவிர அரசியலில் களமிறங்கினார். இந்நிலையில், இவருடைய இளைய மகன் சண்முகப் பாண்டியனை ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த படம் தொடங்கிய நாளில் இருந்து இப்படத்தில் தான் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று கூறிவந்த விஜயகாந்த், இப்படத்தின் லொகேஷன் தேர்வுக்காக சமீபத்தில் சிங்கப்பூரும் சென்று வந்தார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளாராம். தற்போது தேர்தல் பிரசாரத்தில் பிசியாக இருக்கும் விஜயகாந்த் தேர்தல் முடிந்தபிறகு இவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கிக் கொள்ளலாம் என இயக்குனரிடம் கூறியுள்ளாராம்.

இப்படம் காதல் கலந்த ஆக்ஷன் படம்தான் என்று சொல்லப்பட்டாலும், விஜயகாந்த் வரும் காட்சிகளில் அரசியலும் இருக்கும் என்கிறார்கள். அதனால், அதிரடி அரசியல் பஞ்ச் வசனங்களையும் இதில் சேர்க்கவிருக்கிறார்களாம். இப்படத்தை சந்தோஷ்குமார் ராஜன் என்பவர் இயக்குகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி