அவர் சீனா சென்ற பிறகு கோச்சடையான் படத்துக்கு இன்னும் பின்னணி இசை சேர்ப்பு பணியே நடைபெறவில்லை.டம்மியான சவுண்ட் ட்ராக்கை வைத்து சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டனர் என செய்தி வெளியானது.கோச்சடையான் படம் பற்றி வெளியான இந்த செய்தி தற்போது அந்தப் படத்துக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது. சென்சார் செய்யப்பட்ட பிறகு ஒரு படத்தில் எந்த மாற்றங்களும் செய்யக்கூடாது என்பது விதி. இந்த விதியை மீறி கோச்சடையான் படத்தின் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன என்பதை காரணம் காட்டி தணிக்கைக்குழுவுக்கு புகார் வந்திருக்கிறதாம்.
அதன் அடிப்படையில் கோச்சடையான் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும்படி சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம். இது உண்மையா என சென்சார்போர்டு வட்டாரத்தில் விசாரித்தால், கோச்சடையான் 2டி படத்துக்குத்தான் சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை 3டியிலும் வெளியிடுகிறார்கள். எனவே 3டி வெர்ஷனை எங்களுக்குக் காட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி