சென்னை:-சென்னை 18வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆர்.ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–எப்போதும் வென்றான் படத்தை எடுக்க அதன் தயாரிப்பாளர் ராஜாராம் என் தந்தையிடம் ரூ.95 லட்சம் பெற்றார்.
என் தந்தை இறந்து விட்டதால் பணத்தை திருப்பி கேட்டேன். படத்தை வெளியிடுவதற்கு முன் தந்து விடுவதாக கூறினார். தற்போது பணத்தை தராமல் படத்தை 4–ந்தேதி வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.டி.அம்பிகா எப்போதும் வென்றான் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி