மும்பை:-நடிகை இலியானா இந்தி நடிகர் வருன் இருவரும் இந்தி படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது நட்பு மலர்ந்து பின்பு காதலாக மாறியது என்கின்றனர்.வருணை போல் ஒரு ஆணை பார்த்தது இல்லை என்று போகிற இடமெல்லாம் பெருமையாக பேசுகிறார் இலியானா. திருமணம் செய்து கொண்டால் வருண் போல் ஒருவரைத்தான் மணப்பேன் என்றும் கூறி வருகிறார்.
சமீபத்தில் பெங்களூர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும் இருவருக்கும் தனியாக ஒரு அறையில் ஒதுங்கினார்கள். அங்கேயே மறுநாள் அதிகாலை வரை ஒன்றாக உட்கார்ந்து தங்கள் காதலை வளர்த்தார்களாம்.இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது. இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டி விட்டனர் என்கின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலியானா தமிழில் ‘கேடி’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி