செய்திகள்,திரையுலகம் ரஜினியின் அடுத்தபடத்திற்கான பட பூஜை 20ம் தேதி தொடக்கம்!…

ரஜினியின் அடுத்தபடத்திற்கான பட பூஜை 20ம் தேதி தொடக்கம்!…

ரஜினியின் அடுத்தபடத்திற்கான பட பூஜை 20ம் தேதி தொடக்கம்!… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடித்து, இந்த கோடை விடுமுறையில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘கோச்சடையான்’. தமிழ், இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். தீபிகா படுகோன், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

இந்த படம் 3டி அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. ‘அவதார்’ போன்ற ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதன் முதலாக நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையை பெறுகிறது.அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர் . ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்று யோசிக்கின்றனர்.மே 16-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தினைப் பற்றிய செய்தி இணையதளங்களில் கலக்கி வருகிறது.

ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தினை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவிருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான ‘சாருலதா’ படத்தினை இயக்கிய பொன்.குமரன் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார்படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 20-ம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மைசூரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு. அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அனுஷ்கா பச்சைக்கொடி காட்டினாலும், சோனாக்‌ஷி சின்கா தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி