அரசியல்,செய்திகள்,திரையுலகம் ரசிகர்கள் என்னை முதல் மந்திரியாக பார்க்க விரும்புகிறார்கள்!… பாலகிருஷ்ணாவின் பேட்டி…

ரசிகர்கள் என்னை முதல் மந்திரியாக பார்க்க விரும்புகிறார்கள்!… பாலகிருஷ்ணாவின் பேட்டி…

ரசிகர்கள் என்னை முதல் மந்திரியாக பார்க்க விரும்புகிறார்கள்!… பாலகிருஷ்ணாவின் பேட்டி… post thumbnail image
நகரி:-தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான மறைந்த என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா நடித்த ‘லெஜண்ட்‘ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.

நடிகர் பாலகிருஷ்ணா ஒவ்வொரு மாவட்டமாக சென்று ‘‘லெஜண்ட்’’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் தோன்ற திட்டமிட்டு உள்ளார்.
விசாகப்பட்டினம் அருகே உள்ள பிரபலவராக லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் வழிபட்ட பின் தனது யாத்திரையை தொடங்கினார். விஜயவாடாவில் அவர் பேசியதாவது:–

என்னை முதல் மந்திரியாக பார்க்க எனது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். எனக்கு அந்த ஆசை இல்லை என்றாலும் எனது ரசிகர்களுக்காக ஆந்திர சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்.எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பேசி முடிவு எடுப்பேன்.அரசியலில் ஈடுபட்டாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன்.இவ்வாறு பாலகிருஷ்ணா பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி