செய்திகள்,திரையுலகம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா!…

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா!…

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா!… post thumbnail image
சென்னை:-ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தினை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார்.படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 20ம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மைசூரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

படத்தில் மொத்தம் இரண்டு நாயகிகள்.அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அனுஷ்கா பச்சைக்கொடி காட்டினாலும், சோனாக்‌ஷி சின்கா தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி