சென்னை:-‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை அடுத்து உதயநிதியுடன் ‘நண்பேண்டா‘ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரா, இந்த படத்திற்கு குறைந்த சம்பளமே போதும் என்று அவராகவே முன்வந்து பெற்றுக்கொண்டார். முதலில் நல்ல கெமிஸ்ட்ரியில் போய்க்கொண்டிருந்த உதயநிதி, நயன்தாரா படப்பிடிப்பில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நயன்தாரா, தற்போது இரண்டு பெரிய பட்ஜெட் தெலுங்கு படங்களுக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளார். ரூ.2 கோடி சம்பளம் கொடுத்து நயன்தாராவின் ஆறுமாத கால்ஷீட்டை மொத்தமாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் வாங்கிவிட்டதால், உதயநிதியி படத்தில் தொடர்ந்து நடிப்பதில் நயன்தாராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒருவாரம் மட்டுமே நயன்தாராவின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளதால், இந்த படத்தில் இருந்து விலக இருப்பதாக நயன்தாராவின் தரப்பு கூறுகிறது. ஆனால் உதயநிதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை. நயன்தாராதான் எனது ஜோடி என்று முடிவில் உறுதியாக உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி