அப்படி மோதுகிற வெளிநாட்டு குத்துச்சண்டை வீரர்களே இப்படத்தில் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். அதில் ஒருவர் நாதன் ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகர். இவர் போலீஸ் ஸ்டோரி 4 உட்பட பல ஆங்கிலப்படங்களில் நடித்திருக்கிறார்.இவரை பூலோகம் படத்துக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்தவர் அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜான் எ ராஜசேகர். இவர் எந்திரன் படத்தில் தொழில்நுட்பப்பிரிவில் சி.இ.ஓ.வாகவும் பணியாற்றியவர்.
தன் செல்வாக்கை வைத்து பூலோகம் படத்தில் நடிக்க நாதன் ஜோன்ஸை ஒப்பந்தம் செய்து கொடுத்தாராம் ஜான் எ ராஜசேகர். பூலோகம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையிலும் நாதன் ஜோன்ஸுக்கு பேசிய சம்பளத்தில் 30 லட்சத்தை தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி இன்னும் கொடுக்கவில்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி