செய்திகள் முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…

முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…

முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!… post thumbnail image
சென்னை:-தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு பதிவில் குடிபோதையில் வன்முறை, கலவரம் போன்றவை ஏற்படாமல் இருக்கும் வகையில் மதுக்கடைகளை மூடுவதை தேர்தல் ஆணையம் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக வைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஆனால், டாஸ்மாக் பணியாளர்கள் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். பிரசாரம் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளின் கவனம் மதுக்கடைகளின் பக்கம் திரும்பும்.அப்போது மதுக்கடையில் அடிதடி, மது பாட்டில் பதுக்குதல் போன்றவை நடைபெறும். எனவே, கூடுதலாக ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பணியாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள்விடுத்தனர்.

அதனால், 22ம் தேதி மாலை 6 மணியில் இருந்து 23ம் தேதி முழுவதும், 24ம் தேதி தேர்தல் முடியும் வரை மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற நடைமுறை கடைசி தேர்தல் வரை இருந்தது. தற்போது 22ம் தேதி காலை 10 மணி முதலே கடைகள் மூடப்படும்.அதாவது 21ம் தேதி இரவு 10 மணிக்கு மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் 25ம் தேதி காலைதான் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 22ம் தேதி முழுவதும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி