இந்த தொடரில் முதல் முறையாக இந்திய கேப்டன் டோனி டாசை இழந்தார். டாசில் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.
ரஹானேவும், ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ரோகித் ஷர்மாவின் பேட்டிங்குக்கு ஆயுசு வெறும் 4 பந்து தான். அடுத்து களம் இறங்கி அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்ட விராட் கோலி 23 ரன்னிலும் (22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 19 ரன்னிலும் (16 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினர். சுரேஷ் ரெய்னா (6 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால், இந்தியா 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (11.3 ஓவர்) இழந்து தவிப்புக்குள்ளானது.இதற்கு மத்தியில் யுவராஜ்சிங் தடுமாற்றத்துடன் அணியை தூக்கி நிறுத்த போராடிக் கொண்டிருந்தார். அவரும், கேப்டன் டோனியும் கைகோர்த்த பிறகு தான் மைதானத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் களை கட்டியது. சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் முயர்ஹெட்டின் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை யுவராஜ்சிங் தூக்கியடித்து அசத்தினார். டோனியும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறவில்லை. தனது மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவனமுடன் ஆடிய யுவராஜ்சிங், வாட்சனின் பந்து வீச்சில் மறுபடியும் ஒரு இமாலய சிக்சரை பறக்க விட்டு தனது 8-வது அரை சதத்தை கடந்தார்.யுவி-டோனியின் மிரட்டலடியால் இந்திய அணி 170 ரன்களை தொடுவது போல் தெரிந்தது. ஆனால் கடைசி இரு ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர். கடைசி இரு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன் 3 விக்கெட்டுகளும் விழுந்தது. இதில் டோனி 24 ரன்னிலும் (20 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), யுவராஜ்சிங் 60 ரன்னிலும் (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆனதும் அடங்கும். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்தனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த சுழல் மன்னன் அஸ்வின், எதிரணி வீரர்களை மிரள வைத்தார். அபாயகரமான பேட்ஸ்மேன் கிளைன் மேக்ஸ்வெல் (23 ரன், 12 பந்து, 3 சிக்சர்) அவரது பந்தை ‘ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்’ அடிக்க முயற்சித்து கிளீன் போல்டு ஆனது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.தொடக்கம் முதல் கடைசி வரை ஊசலாடிய ஆஸ்திரேலியா இறுதியில் 16.2 ஓவர்களில் 86 ரன்களில் முடங்கியது. இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அஸ்வின் ஒரு இன்னிங்சில் 4 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.இந்த உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் ராஜநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஏற்கனவே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளையும் தோற்கடித்து இருந்தது.
IND – Inning
Batsman R B M 4s 6s S/R
Sharma R. c Muirhead J. b Hodge B. 5 3 0 1 0 166.67
Rahane A. c Haddin B. b Bollinger D. 19 16 4 2 0 118.75
Kohli V. c White C. b Muirhead J. 23 22 3 2 1 104.55
Singh Y. c Maxwell G. b Watson S. 60 43 6 5 4 139.53
Raina S. c Finch A. b Maxwell G. 6 10 2 0 0 60.00
Dhoni M. b Starc M. 24 20 2 1 1 120.00
Jadeja R. run out Watson S. 3 3 1 0 0 100.00
Ashwin R. not out 2 3 0 0 0 66.67
Kumar B. not out 0 1 0 0 0 0
Extras: (w 10, nb 1, lb 6) 17
Total: (20 overs) 159 (8.0 runs per over)
Bowler O M R W E/R
Hodge B. 1.6 0 13 1 8.13
Maxwell G. 3.6 0 20 1 5.56
Starc M. 3.6 0 36 1 10.00
Watson S. 3.6 0 38 1 10.56
Bollinger D. 3.6 0 24 1 6.67
Muirhead J. 1.6 0 24 1 15.00
AUS – Inning
Batsman R B M 4s 6s S/R
Hodge B. c Jadeja R. b Mishra A. 13 18 2 0 0 72.22
Maxwell G. b Ashwin R. 23 12 2 0 3 191.67
Starc M. run out Dhoni M. 2 4 0 0 0 50.00
Watson S. b Sharma M. 1 4 0 0 0 25.00
Bollinger D. not out 1 1 0 0 0 100.00
Muirhead J. c Dhoni M. b Ashwin R. 3 7 1 0 0 42.86
Finch A. c Kohli V. b Ashwin R. 6 11 0 1 0 54.55
Warner D. c Sharma R. b Ashwin R. 19 21 2 1 1 90.48
White C. c Jadeja R. b Kumar B. 0 2 0 0 0 0
Bailey G. c Kohli V. b Jadeja R. 8 10 0 0 1 80.00
Haddin B. c Rahane A. b Mishra A. 6 8 1 1 0 75.00
Extras: (w 1, lb 3) 4
Total: (16.2 overs) 86 (5.3 runs per over)
Bowler O M R W E/R
Raina S. 0.6 0 16 0 26.67
Jadeja R. 3.6 0 25 1 6.94
Ashwin R. 3.2 0 11 4 3.44
Kumar B. 2.6 0 7 1 2.69
Sharma M. 1.6 0 11 1 6.88
Mishra A. 2.6 0 13 2 5.00
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி