செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘ராஜவேஷம்’!…

‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘ராஜவேஷம்’!…

‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் ‘ராஜவேஷம்’!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘’ படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இதற்காக உணவு கட்டுப்பாடு இருந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வருத்தியுள்ளார்.

இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இப்படத்துக்கு பின் விக்ரம் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம். இப்படத்துக்கு ‘ராஜவேஷம்‘ என பெயர் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பூபதி பாண்டியன், காமெடி கலந்த ஆக்ஷன் படங்களை எடுத்தவர். இதையும் அது மாதிரியே கொண்டுவரப் போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி