செய்திகள்,திரையுலகம் நடிகைகள் ஹன்சிகா, சமந்தா இடையை போட்டி!…

நடிகைகள் ஹன்சிகா, சமந்தா இடையை போட்டி!…

நடிகைகள் ஹன்சிகா, சமந்தா இடையை போட்டி!… post thumbnail image
சென்னை:-நடிகை சமந்தா தற்போது சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’, விஜய் ஜோடியாக ‘கத்தி’ படங்களில் நடிக்கிறார். மேலும் நான்கு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.ஹன்சிகா ‘மான் கராத்தே’, ‘வாலு’, ‘அரண்மனை’, ‘உயிரே உயிரே’, ‘மீகாமன்’, ‘வேட்டை மன்னன்’, ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 7 படங்களில் நடிக்கிறார். ஒரு தெலுங்கு படமும் உள்ளது.

இரு மொழிகளிலும் ஹன்சிகா, சமந்தா இடையேதான் போட்டி நிலவுகிறது. சமந்தா படங்களில் நடிக்க நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம். விளம்பர போஸ்டர்களில் கதாநாயகனுக்கு இணையாக தனது படமும் இடம்பெற வேண்டும் என்றும் பட விழாக்களிலும் தனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துகிறாராம்.

ஆனால் ஹன்சிகா இதற்கு நேர்மாறாக இருக்கிறார். ஒப்பந்தப்படி தனக்குரிய முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டால் மற்ற விஷயங்கள் பற்றி அவர் கவலைப்படுவது இல்லை. போஸ்டரில் தனது படம் இல்லாமல் இருந்தாலும் வருத்தப்படுவது இல்லை என்கின்றனர். இதனால் சமந்தாவுக்கு போக வேண்டிய படங்கள் ஹன்சிகாவுக்கு மாறுகிறதாம். இதுவே இருவர் மோதலுக்கு காரணம் என்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி