எனக்கு அரசியல் செய்ய தெரியாது. சாதாரண மனிதனின் பிரச்சினைகளை தீர்க்கவே அரசியலுக்கு வருகிறேன். சமுதாயத்திற்கு பணி செய்வதே என் நோக்கம். நான் அரசியல்வாதியாக மாற முயற்சி செய்யமாட்டேன். நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். எனவே நான் இப்போது இங்கு வந்துள்ளேன்.கடந்த 7 ஆண்டுகளாக நான் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் நோக்கம். டெல்லியை போல மும்பை மாறுவதை நான் விரும்பவில்லை. பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கராத்தே மற்றும் தற்காப்பு கலைகளை அவர்களுக்கு கற்று கொடுக்க ஏற்பாடு செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
ராக்கி சாவந்த் தொடங்கி உள்ள புதிய கட்சிக்கு கிருஷ்ணலால் ஹான்ஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக நடிகை ராக்கி சாவந்த், பொதுச்செயலாளராக சுனில் குப்தா, செய்தி தொடர்பாளராக ரிஷி ராஜு, பொருளாளராக ராஜேஷ் சேத் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பச்சை மிளகாய், கத்திரிக்கோல், மரக்குச்சி ஆகியவற்றில் ஒன்றை தங்கள் கட்சி சின்னமாக தேர்ந்தெடுக்க உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி