இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா பணியாற்றியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரான சுகந்தாராமுக்கு பின்னணி குரல் கொடுத்தது கிருத்திகாதான் என்பதுதான் புதிய செய்தி.சந்தோஷ்சிவன், கிருத்திகாவின் பின்னணி குரலுக்கு பெரும் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த கேரக்டரின் உணர்ச்சிகளை தனது குரலால் மிக அற்புதமாக வெளிக்கொணர்ந்து ரசிகர்களின் பெரும் பாராட்டை பெற்றுள்ளதாக கிருத்திகாவுக்கு புகழ்மாலை சூடியுள்ளார் சந்தோஷ் சிவன்.
கிருத்திகா உதயநிதி ஏற்கனவே தாண்டவம் படத்தில் லட்சுமிராய்க்கும், அனய்கா என்ற தெலுங்கு படத்தில் நந்திதாவுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் என்பது குற்ப்பிடத்தக்கது. மேலும் தற்போது ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகள்’ என்ற படத்திலும், யாமிருக்க பயமேன் என்ற படத்திற்கும் பின்னணி குரல் கொடுத்து வருகிறார் கிருத்திகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி