லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.
நிலநடுக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரான லா ஹப்ராவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 2 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. தொடக்கத்தில் 5.3 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட அமெரிக்காவில் 4 நாடுகளில் உணரப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி