இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் கராத்தே ஹுசைனி நடிக்க இருப்பதாக பெரும்பாலான இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை கராத்தே ஹுசைனி மறுத்துள்ளார்.நான் தற்போது ‘முடிவு’ என்ற என்னுடைய சொந்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். சினிமா உலகில் நான் பெரிதும் மதிக்கப்படுவர்களில் ஒருவர் அஜீத். அதைப்போல என்னுடைய மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர் கவுதம் மேனன். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவுதம் மேனனை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன் அதை பார்த்து நான் அவருடைய படத்தில் நடிக்க இருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.
இப்போதைக்கு நான் எனது சொந்த படத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் அஜீத் படம் உள்பட வேறு படங்களில் நடிக்க முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.என ஹுசைனி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி