செய்திகள்,திரையுலகம் ஏப்ரல் 11ம் தேதி நேரடியாக மோதும் விஷால், வடிவேலு படங்கள்!…

ஏப்ரல் 11ம் தேதி நேரடியாக மோதும் விஷால், வடிவேலு படங்கள்!…

ஏப்ரல் 11ம் தேதி நேரடியாக மோதும் விஷால், வடிவேலு படங்கள்!… post thumbnail image
சென்னை:-விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’, ‘வடிவேலுவின் ஜெகஜாலபுஜபல தெனாலி ராமன்’ படங்கள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி ரிலீசாகின்றன. தமிழ் புத்தாண்டையொட்டி இரு படங்களும் ஒன்றாக வருகின்றன.

‘நான் சிகப்பு மனிதன்’ பழைய ரஜினி பட தலைப்பு ஆகும். இதில் விஷால் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். திரு இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் லட்சுமிமேனன் முத்தக் காட்சி இடம் பெறுகிறது. ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளது.நடிகை இனியாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தில் வடிவேலு நாயகனாக நடித்துள்ளார். இரு வேடங்களில் வருகிறார் காமெடி படமாக தயாராகியுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார்.
ஏற்கனவே வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ஹிட்டானதால் அதே சாயலில் இப்படத்தை எடுத்துள்ளனர்.இது போல் காமெடி நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக் நடித்துள்ள நாடோடி வம்சம் படமும் ஏப்ரல் 11–ல் ரிலீசாகிறது. ஏற்கனவே வடிவேலு, சிங்கமுத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் வடிவேலு படம் ரிலீசாகும் அதே நாளில் படத்தை போட்டியாக இறக்குகிறார் சிங்கமுத்து.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி