சென்னை:-பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர்ஜெகதீசன் தலைமையில், நேற்று மாலை பெரியார் திராவிடர் கழகத்தினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.லிங்குசாமி தயாரிப்பில், சந்தோஷ்சிவன் இயக்கத்தில், ‘இனம்’ என்ற படம், திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அந்த படத்தில் ஈழத்தமிழர்களையும், அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் உள்ளது. படத்தின் கருவே தவறாக உள்ளது. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும், இழிவுபடுத்துவதாக, அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக உள்ள அந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படும்.மேலும் படத்தை தயாரித்த லிங்குசாமி, இயக்கிய சந்தோஷ்சிவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி