மும்பை:-பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான், தான் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை என்றும், அக்கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கூறுவது தவறான தகவல் என்றும் கூறி உள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில்
‘நான் எந்த ஒரு கட்சியையும் சேர்ந்தவன் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அமீரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ஆரம்பத்தில் இருந்தே தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என்பதை அமீர்கான் தெளிவாக கூறி வருகிறார். அவர் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்ய போவதில்லை,’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி