‘பாண்டியநாடு’ வெற்றிக்குபிறகு விஷால் பிலிம் பேக்டரி, இயக்குனர் ஹரியுடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ‘பூஜை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ப்ரியன் ஒளிப்பதிவை கையாள்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஹரி.
மேலும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, சூரி, ஜெயப்பிரகாஷ், ஆர்.சுந்தர்ராஜன், தலைவாசல் விஜய், அபிநயா, சித்தாரா, கௌசல்யா, சார்லி மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இயக்குனர் ஹரி தமிழில் ‘சாமி’, ‘ஆறு’, ‘சிங்கம்’, உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றிபெற்றவர். ஏற்கனவே இயக்குனர் ஹரியும், விஷாலும் இணைந்து ‘தாமிரபரணி’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி