கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இலியானா உள்ளிட்ட 3 பேரும் பிஎம்டபிள்யூ கார்களில் தனித்தனியாக சென்றனர். ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக சென்றுக் கொண்டிருந்த கார்களை கண்டதும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.அந்த கார்களை ஜீப்பில் துரத்தி சென்று ரேடிசன் சந்திப்பு அருகே மடக்கி பிடித்தனர். கார் அருகே சென்று பார்த்தபோதுதான் காருக்குள் இலியானா, வருண் தவான், நர்கிஸ் ஃபக்ரி ஆகியோர் இருப்பது தெரிந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர்களிடம் காரின் ஆர்.சி. புத்தகத்தை அதிகாரிகள் கேட்டபோது ஒருவர் மட்டும் எடுத்து தந்தார். மற்ற 2 டிரைவர்களும் காரில் நம்பர் பிளேட் இருந்தும் ஆர்.சி. புத்தகம் இல்லை என்றனர். பிறகு 2 கார்கள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இலியானா உள்ளிட்ட 3 பேரையும் ஒரிஜினல் நம்பர்பிளேட் உள்ள காரில் அமர்த்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.மற்ற 2 காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நடுரோட்டில் இலியானா உள்ளிட்ட நட்சத்திரங்களை அதிகாரிகள் மடக்கிபிடித்ததால் அங்கு கூட்டம் கூடியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2 கார்கள் சோதனை ஓட்டத்துக்காக பயன்படுத்தும் கார்கள் என்று சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தினர் கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி