விரைவில் திரைக்கு வரவிருக்கும் கோச்சடையான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விஷூவல் எபக்ட் டெக்னாலஜி, டிஜிட்டல் டெக்னாலஷி மற்றும் முதன் முறையாக மோஷன் கேப்சர் எனப்படும் நடிப்புருவ பதிவாக்கம் போன்ற உயர் தொழில்நுட்பங்கள், ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளன.இப்புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கோச்சடையான் படம் குழந்தைகள், பெற்றோர்கள் மட்டுமின்றி அனைத்து வகையான ரசிகர்களையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடித்துள்ள எனது நண்பர் ரஜினிகாந்த், இப்படத்தின் இயக்குநர் சவுந்தர்யா மற்றும் பிரம்மாண்டமான இப்படத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு இப்படம் இதுவரை பார்த்திராத அசாதாரண டிஜிட்டல் அனுபவமாக இருக்கும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு அசோக் அமிர்தராஜ் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி