அப்படிப்பட்ட சமந்தா, பாலிவுட் நடிகை வித்யாபாலனின் நடிப்பை சமீபகாலமாக புகழ்ந்து வருபவர், இன்னொரு பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், குயின் என்ற படத்தில் நடித்திருப்பதை பெரிய அளவில் புகழ்ந்து பேசி வருகிறார்.அதோடு, இந்த குயின் படத்தை யாராவது தெலுங்கில் ரீமேக் செய்தால் கங்கனா நடித்த வேடத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். அப்படியொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்பட்சத்தில் கணிசமான அளவு சம்பளத்தைகூட குறைத்துக்கொள்வேன் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் சமந்தா.
ஆனால், தற்போது அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையையே சமந்தா வாங்கியிருப்பதாக ஆந்திராவில் செய்தி பரவியுள்ளது. இதையறிந்து ஷாக்கான சமந்தா, குயின் படத்தில் நடிக்க விருப்பம் மட்டுமே தெரிவித்திருந்தேன்.மற்றபடி அப்படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கியிருப்பதாக வெளியான செய்தி வழக்கம்போல் வதந்திதான் என்று தனது சகாக்களிடம் கூறி வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி