இருப்பினும், நயன்தாரா இல்லாமல் ஒரு பாஸ் என்ற பாஸ்கரனா? அதை நினைத்துப் பார்க்கவே வெறுப்பாக உள்ளது. நான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், இன்றைக்கும் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களையும் எனது நினைவுகளில் பசுமையாக வைத்திருக்கிறேன்.
அந்த அளவுக்கு அவருடன் நடிக்கிறபோது ஒரு இனம் புரியாத ரொமான்டிக்கான பர்பாமென்ஸ் வெளிப்படும். அதனால்தான் அவருடன் மீண்டும் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் மிகுதியாக இருக்கிறேன் என்று தனது பீலிங்ஸை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்யா.
ஆனாலும் நயன்தாரா இறங்கி வந்தபாடில்லை. ஆர்யாவை விட்டு விலகிய பிறகுதான் நானே எதிர்பார்க்காத சிம்பு படவாய்ப்பெல்லாம் எனக்கு கிடைத்திருக்கிறது.அதனால், எனது மார்க்கெட்டை நான் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் ஆர்யாவை விட்டு விலகியிருப்பதுதான் எனக்கு நல்லது என்று சொல்லிக்கொண்டு, தொடர்ந்து ஆர்யாவின் விருப்பத்துக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறார் நயன்தாரா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி