இருப்பினும், அவரை முழுநேர வில்லனாக்க சில டைரக்டர்கள் திட்டமிட்டதால் தன் பெயரளவில் நெகடீவ் இமேஜ் உருவாக்க விரும்பாத கராத்தே ஹூசைனி அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து கராத்தே பயிற்சி கொடுப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டார்.
இந்நிலையில, தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முதலில் தன்னை வில்லனை தவிர வேறு எந்த வேடத்துக்கும் அழைக்க மாட்டார்கள் என்று நினைத்த ஹூசைனி, வில்லன் வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்றாராம்.
அதையடுத்து, அவரது ரோல் பற்றி கெளதம்மேனன் சொன்னதும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்று டபுள் ஓ.கே சொல்லி விட்டாராம் ஹூசைனி.ஆக, இந்த படத்தில் கராத்தே ஹூசைனியை விரும்பி நடிக்க வைத்திருப்பதால், இதில் அஜீத் கராத்தேயை மையப்படுத்தும் சண்டை காட்சியிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி