தமிழில் கடைசியாக ‘ரெளத்திரம்’ படத்தில் நாயகியாக நடித்தார். இப்படம் 2011–ல் வந்தது. அதன்பிறகு கன்னடத்தில் அவர் நடித்த ‘சந்திரா’ படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். நீண்ட நாட்கள் தமிழ் பட வாய்ப்புகள் வராததால் தவிப்பில் இருந்தார்.இந்நிலையில் சசிகுமாரை கதாநாயகனாக வைத்து பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடிக்க ஸ்ரேயாவை தேர்வு செய்தனர். இதனால் மகிழ்ச்சியானார். இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் பட உலகில் இன்னொரு ரவுண்ட் வர திட்டமிட்டார்.
படப்பிடிப்புக்காக சென்னை வந்தும் தங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் இந்த படவாய்ப்பும் பறிபோனது. அவருக்கு பதில் வரலட்சுமி நடிக்கிறார். சிலர் ஸ்ரேயா வேண்டாம் என்று பாலாவை நிர்பந்தம் செய்ததாகவும் எனவேதான் அவர் கழற்றி விடப்பட்டதாகவும் செய்தி பரவி உள்ளது. இதனால் ஸ்ரேயா மனஉளைச்சலில் இருக்கிறார். தனக்கு எதிராக சதி நடப்பதாக அவர் குமுறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி