ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டது. தற்போது சென்சார் முடிந்து படத்தினை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.’தெனாலிராமன்’ படத்தின் பணிகள் தற்போது இறுதிகட்டத்தினை எட்டியிருக்கிறது. ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீடு பொறுத்து, ‘தெனாலிராமன்’ வெளியீடு முடிவு செய்யப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ‘கோச்சடையான்‘, ஏப்ரல் 11ம் தேதி வெளியாகாத சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்று ‘தெனாலிராமன்’ வெளியாவதை உறுதிசெய்து இருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி